வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படும் இந்த ஆண்டின் இஸ்ரோவின் முதல் செயற்கை கோள் பிஎஸ்எல்வி-சி62
புதுடெல்லி, 7 ஜனவரி (ஹி.ச.) இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 செயற்கை கோள் வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: விவசாயம், நகர்ப்புறப் பகுதி வரைபடம் மற்றும் சுற்றுச்சூ
வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படும் இந்த ஆண்டின் இஸ்ரோவின் முதல் செயற்கை கோள் பிஎஸ்எல்வி-சி62


புதுடெல்லி, 7 ஜனவரி (ஹி.ச.)

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 செயற்கை கோள் வரும் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

விவசாயம், நகர்ப்புறப் பகுதி வரைபடம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளில் இந்தியாவின் தொலை உணர்வுத் திறன்களை மேம்படுத்துவதும் விதமாக பிஎஸ்எல்வி சி62 செயற்கை கோள் வரும் 12-ம் தேதி காலை 10:17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஸ்ரீஹரிட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் நடைபெற உள்ளது.

பிஎஸ்எல்வி சி-62 செயற்கை கோளுடன் ஒரு ஐரோப்பிய செயற்கைக்கோள் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், மொரீஷியஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய சர்வதேச நாடுகளால் உருவாக்கப்பட்ட 18 சிறிய செயற்கைக்கோள்களும் கொண்டு செல்லப்பட உள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM