காவல்துறை தன்னை நிர்வாணப்படுத்தி, தாக்கி கைது செய்யதாக பாஜக பெண் நிர்வாகி புகார்
கர்நாடகா, 07 ஜனவரி (ஹி.ச.) கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் காவல்துறை தன்னை நிர்வாணப்படுத்தி, தாக்கி கைது செய்யதாக பாஜக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். கேசவபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் கைது செய்யப்பட்டபோது, ​​ஒரு பாஜக பெண் தொ
பாஜக நிர்வாகி


கர்நாடகா, 07 ஜனவரி (ஹி.ச.)

கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் காவல்துறை தன்னை நிர்வாணப்படுத்தி, தாக்கி கைது செய்யதாக பாஜக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கேசவபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் கைது செய்யப்பட்டபோது, ​​ஒரு பாஜக பெண் தொண்டரை காவல்துறை நிர்வாணப்படுத்தி, கொடூரமாகத் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியதை அடுத்து அங்கு சர்ச்சை வெடித்தது.

இந்தச் சம்பவத்தின் காணொளியில், அந்தப் பெண் தொண்டர் ஒரு பேருந்தில் ஆண் மற்றும் பெண் காவலர்களால் சூழப்பட்டிருப்பது தெரிகிறது.

புகாரின்படி, இந்தச் சம்பவம் காங்கிரஸ் கவுன்சிலர் சுவர்ணா கல்குன்ட்லா, விஜயலட்சுமி ஹண்டி என்றும் அழைக்கப்படும் சுஜாதா என்ற அந்தத் தொண்டர், SIR-BLO அதிகாரிகளை அப்பகுதிக்கு அழைத்து வந்து, வாக்காளர்களின் பெயர்களை நீக்க உதவியதாகக் குற்றம் சாட்டி முன்னதாகப் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை சுஜாதாவைக் கைது செய்தது.

இருப்பினும், சுஜாதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதிகாரிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் காவல்துறை கூறியது. இதைத் தொடர்ந்து, ஒரு எதிர் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 உட்பட பல பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாஜக தலைவர்கள் காவல்துறையின் நடவடிக்கையை மனிதாபிமானமற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கண்டித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். காவல்துறை தாக்குதல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

ஹுப்பள்ளி-தார்வாட் காவல் ஆணையர் சசி குமார், இந்தச் சம்பவம் கேசவபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலுக்கியா நகரில், தகுதிவாய்ந்த அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்போது நடந்ததாகக் கூறினார்.

உள்ளூர்வாசிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. ஒரு பெரிய கூட்டம் கூடியது, வாக்குவாதங்கள் வெடித்தன, மேலும் நிலைமை உடல்ரீதியான தாக்குதலாக மாறியது, என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனவரி 5 அன்று, ஒரு உள்ளூர்வாசி அளித்த கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றில் ஒரு பெண் காவலில் எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.

அவர் மற்றொரு நபரை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது,

என்று அவர் சொன்னார்.

கைது குறித்துப் பேசிய ஆணையர்,

கைது செய்யப்பட்டபோது, ​​அவரும் அவருடன் தொடர்புடையவர்களும் காவல்துறையை கடுமையாக எதிர்த்தனர். அந்தச் செயல்பாட்டில், எங்கள் உதவி ஆய்வாளர் ஒருவரும் மூன்று முதல் நான்கு காவலர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டு, தங்கள் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர். இது தொடர்பாககாவல்துறையால் ஒரு தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சஷி குமார் கூறுகையில்,

அவரை வாகனத்திற்கு அழைத்துச் சென்றபோது, ​​அவர் தனது ஆடைகளை அணிந்திருந்தார். வாகனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அவரே தனது ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டார்.” பெண் காவலர்கள், உள்ளூர் மக்களின் உதவியுடன், அவர் முறையாக ஆடை அணிவதை உறுதி செய்தனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “காவல்துறை அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது,” என்றார். அவர் மீது ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், “அதில் ஐந்து வழக்குகள் முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்தவை, நான்கு வழக்குகள் இந்த ஆண்டைச் சேர்ந்தவை.

இந்த நான்கில் மூன்று வழக்குகள் பொதுமக்களாலும், ஒன்று எங்கள் காவல்துறை ஊழியராலும் பதிவு செய்யப்பட்டுள்ளன,என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam