Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 ஜனவரி (ஹி.ச.)
கோடக் மஹிந்திரா வங்கி , பங்குப்பிரிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி ஜனவரி 14ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அதன் ஈக்விட்டி பங்குகளைப் பிரிப்பது தொடர்பாக முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆகும்.
இந்த பங்குப் பிரிப்பில், தலா ரூ. 5 முகமதிப்புள்ள 1 ஈக்விட்டி பங்கு, தலா ரூ. 1 முகமதிப்புள்ள 5 ஈக்விட்டி பங்குகளாகப் பிரிக்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. அதாவது 1:1 என்ற விகிதத்தில் பங்குப்பரிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவிருக்கும் பங்குப் பிரிவு, கோடக் மஹிந்திரா வங்கிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பெருநிறுவன நடவடிக்கையாகும். இந்த வங்கி கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்புதான் பங்குப் பிரிப்பை மேற்கொண்டது.
வங்கி இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டில் தனது பங்குகளை ரூ. 10 முகமதிப்பிலிருந்து ரூ. 5 ஆகப் பிரித்தது, மேலும் அந்தப் பங்குகள் செப்டம்பர் 2010-இல் பங்குப் பிரிவுக்குப் பிந்தைய விலையில் வர்த்தகம் செய்யப்பட்டன.
இந்த புதிய பங்குப் பிரிப்பு மூலமாக அதிக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் வகையில் மாற்றுவதே நோக்கம் ஆகும்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி நிலவரப்படி பதிவேட்டில் உள்ள பங்குதாரர்கள், பங்குப் பிரிப்புக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட பங்குகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
Hindusthan Samachar / JANAKI RAM