மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்
மதுரை, 07 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. உலகப் புக
மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடக்கம்


மதுரை, 07 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகளுக்கான பந்தக்கால் இன்று (ஜனவரி 07) நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி.15, பாலமேடு ஜனவரி.16, அலங்காநல்லூரில் ஜனவரி.17ல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க madural.nic.in இணையதளம் மூலம் இன்று (ஜனவரி 07) மாலை 5 முதல் நாளை மாலை 5 வரை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஒரு இடத்தில் மட்டுமே பங்கேற்க முடியும்.

முன்பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியானவர்களுக்கு டோக்கள் தரப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b