Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி , 07 ஜனவரி (ஹி.ச.)
தூத்துக்குடி குறுக்குசாலையில் உள்ள கீதாஜீவன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா இன்று (ஜனவரி 07) நடைபெற்றது. விழாவிற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் 209 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது,
விழாவில் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வகையில் திறனாய்வு பயிற்சி வழங்கப்படுகிறது எதிர்கால தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்வியும் மருத்துவமும் எனக்கு இரண்டு கண்கள் என்று பல விழாக்களில் முதலைமைச்சர் முக.ஸ்டாலின் பேசுவார்.
காரணம் அவ்வளவு தூரம் இந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தான் ஓவ்வொரு வரும் தனது தாய் தந்தைகளின் சொல்படி கேட்டு ஆசிரியர்கள் வழிகாட்டுதலன் படி போராசிரியர்களின் அறிவுரைகளின் மூலம் கல்லூரி படிப்பை முடித்துள்ளீர்கள் கல்வியும் பொதுஅறிவையும் வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் எல்லோருக்கும் ஓரு லட்சியம் இருக்க வேண்டும்.
ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப் எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வரவேண்டும் என்பது மட்டுமின்றி மருத்துவர் பொறியாளர் என தன்னை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விலும் ஈடுபட வேண்டும் என்ற என்னத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் இருந்து பல பணிகளை செய்ததின் மூலம் முக்கிய பதவிகளை அடைந்துள்ள நிலையில் நீங்களும் இது போன்ற பணிகளுக்கு வரவேண்டும் பட்டம் பெற்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லூரியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இளங்குமரன் ஆண்டறிக்கையை வாசித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ், டாக்டர் கீர்த்தனாமகிழ், சுதன்கீலர், சுதாசுதன், பல்லைக்கழக பிரதிநிதி சௌடியா, வடக்கு மாவட்ட மருத்துவஅணி தலைவர் அருண்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b