ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் தவெகவில் இணைவார்கள் - செங்கோட்டையன்
ஈரோடு, 07 ஜனவரி (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீரம்பாளையம் பகுதியில் இன்று தமிழக கட்சி கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. முன்னதாக தமிழக கட்சி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் அலு
செங்கோட்டையன்


ஈரோடு, 07 ஜனவரி (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீரம்பாளையம் பகுதியில் இன்று

தமிழக கட்சி கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

முன்னதாக தமிழக கட்சி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன்

அலுவலகத்தை திறந்து வைத்து அலுவலகத்தில் வைத்திருந்த காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் வேலுநாச்சியார் உள்ளிட்ட படங்களுக்கு மலர் தூவி

மரியாதை செலுத்தினார்.

பின்னர்

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

தமிழக வெற்றிக் கழகம் இப்போது வெற்றி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் குறித்து செய்தியாளர் எழுப்பிய

கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

இன்று காலை அன்புமணி ராமதாஸ் அதிமுக

கூட்டணியில் இணைந்திருப்பதாக கருத்துக்கள் வரப்பெற்றன என

தெரிவித்த அவர் புடிச்சிருந்து பாருங்கள் எந்த வேகத்தில் தமிழக வெற்றி கழகம்

வீரநடை போடுகிறது என்பதை காலம் பதில் சொல்லும் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். ஓபிஎஸ் அவர்கள் மீண்டும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவாரா எனக்கு எழுப்பிய கேள்விக்கு நிச்சயம் அனைவரும் வருவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் ஜனநாயகம் திரைப்படத்திற்கு தடை விதித்திருப்பது குறித்து கேள்விக்கு இன்று மாலை அது தெரிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam