Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 7 ஜனவரி (ஹி.ச.)
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலின் மகர விளக்கு காலம், கடந்த மாதம் 30-ம் தேதி மாலை துவங்கியது. 31 முதல் நெய்யபிஷேகம் துவங்கியது.
அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று காலை பம்பையில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் மலை ஏற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பம்பை மணல் பரப்பில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு படிப்படியாக மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் வரும் வழியில் மீண்டும் சரங்குத்தியில், 'கியூ காம்ப்ளக்ஸ்' கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டு, பின் சன்னிதானத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகிறது.
இதற்கிடையே, 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு 4,000 முதல் 4,200 பக்தர்கள் வரை ஏற்றப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், கூட்டம் அலை மோதுவதால், 18 படிகளில் ஏற, 10 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM