திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் -6 மணி ஆனதால் மற்ற பக்தர்களை அனுமதிக்கக் கோரி வாக்குவாதம்!
மதுரை, 07 ஜனவரி (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு திருவிழா, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் தேர் கிளம்புதல் அதிகாலை வேளையில்
சிக்கந்தர் தர்கா


மதுரை, 07 ஜனவரி (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு திருவிழா, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் தேர் கிளம்புதல் அதிகாலை வேளையில் கோலாகலமாக நடைபெற்றது.

மலையடிவாரத்தில் உள்ள பெரிய ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம், தமிழ் நாதஸ்வரம் தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பவனி வந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தேர் ஊர்வலத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை புனிதச் சந்தனம் மலை மேல் உள்ள தர்காவிற்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது அப்போது மலை அடிவாரத்திற்கு வந்தபோது மலை மீது 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை என நீதிமன்ற உத்தரவு உள்ளது.

ஆனால் வழக்கமாக 5 மணிக்குள் மழை மீது இந்த சந்தனக்கூடு எடுத்துச் செல்லப்படும் சூழலில் ஆறு மணி ஆகிவிட்டது எனவே 50 பேர் தவிர மற்ற பொது மக்களையும் அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையிடம் முறையிட்டனர் ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி 50 பேர் மட்டுமே தற்போது அனுமதிக்க முடியும் என காவல்துறையினர் கூறியதால் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது மேலும் மலைக்கு செல்ல இருந்ததில் ஒருவர் கையில் கேமராவுடன் வந்ததால் காவல்துறையினர் மலைக்கு கேமரா எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சந்தனக்கூடு விழாவிற்காக மழைக்கு செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தற்போது ஆறு மணிக்கு மேல் சென்று இருப்பதால் அவர்கள் மீண்டும் கீழே வரும் வரை மற்ற பக்தர்கள் யாருக்கும் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam