Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 07 ஜனவரி (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் காடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்தப்பட்டது.
தென்காசி மாவட்ட வனத்துறையினரும், பள்ளி கல்வித்துறையினரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் உள்ளிட்ட அதிகாரிகளும், ஏராளமான பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, வனத்தாலும் வனத்தின் மூலம் பெறப்படும் நன்மைகள் குறித்தும், வனத்தை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாணவ, மாணவிகளிடையே பல்வேறு விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, இந்த விழிப்புணர் நிகழ்ச்சியின் போது தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்மோகன் பேசும்போது,
நமது அன்றாட வாழ்க்கை சூழலுக்கும், வனத்திற்கும் எப்பொழுதுமே ஒரு தொடர்பு உள்ளது எனவும், வனத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் மட்டுமே வன விலங்குகளும், மனிதர்களும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் எனவும், ஆகவே வனத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாம் ஒருங்கிணைந்து நாம் எடுக்க வேண்டும் என மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கிய அவர், வருகின்ற பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் இல்லா குற்றாலத்தை உருவாக்க அறிவிப்பு வெளியிடப்போவதாகவும், பிளாஸ்டிக் இல்லா குற்றாலத்தை உருவாக்கும் பட்சத்தில் வனமும், வன விலங்குகளும் எந்த விதமான மாசுபாடும் இல்லாமல் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN