Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 07 ஜனவரி (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் 179-வது ஆராதனை விழாவினை முன்னிட்டு இன்று (ஜனவரி 07) ஒருநாள் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சை மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலகங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b