Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.)
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, டில்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர். அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்தது தெரிய வந்தது.
இதன் பிறகு, வங்க தேசத்தினர் 25 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து சில இந்திய அடையாள ஆவணங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
இவர்கள் உள்ளூர் மக்களுடன் மக்களாக சட்டவிரோதமாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உரிய சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / JANAKI RAM