ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - ரயில்வே நிர்வாகம் தகவல்
திருச்சி , 08 ஜனவரி (ஹி.ச.) ராமேஸ்வரம்-தாம்பரம் மற்றும் தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரெயில்களில் (06105/06106) கூடுதலாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் வருகிற 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி இ
ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - ரயில்வே நிர்வாகம் தகவல்


திருச்சி , 08 ஜனவரி (ஹி.ச.)

ராமேஸ்வரம்-தாம்பரம் மற்றும் தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு ரெயில்களில் (06105/06106) கூடுதலாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் வருகிற 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி இணைக்கப்பட்டு இருக்கும் என திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த ரெயிலில் திருத்தப்பட்ட பெட்டி அமைப்பில் 3 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான 1 இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1 லக்கேஜ் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b