Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 ஜனவரி (ஹி.ச.)
மும்பையில் உள்ள வேதாந்தா நிறுவனம் உலக அளவில் கனிமம் மற்றும் சுரங்க தொழில்களில் ஈடுபட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையையும் நடத்தி வந்தது.
வேதாந்தா குழுமத்தின் உரிமையாளரான அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால்
( வயது 49)வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான தல்வண்டி சபோ பவர் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவராகவும், அக்குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். நியூ யார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவலை அனில் அகர்வால் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அனில் அகர்வாலின் மகன் மரணம் குறித்து பதிவிற்கு பிரதமர் மோடி இன்று (ஜனவரி 08) இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
அக்னிவேஷ் அகர்வாலின் அகால மரணம் மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உங்கள் துயரத்தின் ஆழம் இந்த நெகிழ்ச்சியான அஞ்சலியில் தெளிவாகத் தெரிகிறது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும், தொடர்ந்து வலிமையையும் தைரியத்தையும் பெற பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b