Enter your Email Address to subscribe to our newsletters

ரங்காரெட்டி, 08 ஜனவரி (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் இன்று (ஜனவரி 08) கல்லூரி மாணவர்கள் 5 பேர் சென்று கொண்டிருந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை அதிவேகமாக இயக்கியதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்துள்ளது என்பது தெரியவந்தது.
இறந்தவர்கள் கார்கயாலா சுமித், 20, ஸ்ரீ நிகில், 20, பால்முரி ரோஹித், 18, மற்றும் தேவலா சூர்யா தேஜா, 20 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்து இருக்கிறது.
விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபரான, ஐபிஎஸ் கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படிக்கும் மாணவி சுங்கரி நக்ஷத்ரா (20), காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறை விபத்திற்கான காரணத்தை விசாரித்து வருகிறது.
Hindusthan Samachar / vidya.b