Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜனவரி (ஹி.ச)
சென்னை அவசர அழைப்பு எண் 100-ஐ செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், தமிழக முதலமைச்சரின் இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் உடனடியாக எச்சரிக்கையுடன் செயல்பட்டு, முதலமைச்சரின் இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள், காவல் துறையின் சிறப்பு பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
முழுமையான சோதனையின் பின்னர், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. எந்தவித வெடிகுண்டோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை புரளி என தெரியவந்தது
இதனிடையே, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் விஷமச் செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அழைப்பு வந்த செல்போன் எண் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது பாதுகாப்பை பாதிக்கும் வகையில் பொய்மிரட்டல்கள் விடுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ