Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)
தமிழகம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றது. இன்னும் சில வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பாணையை வெளியிடவுள்ளது. அனைத்துக்கட்சிகளும் தங்களுக்கே உரித்தான பாணியில் தேர்தலைச் சந்திக்க தயாராகி வருகின்றன.
இதையொட்டி ஆளும் திமுக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
மக்களை கவரும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் நடைமுறைகள் ஒருபுறம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. மறுபுறம் தேர்தலுக்கு முன்பாக புதிய நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக அரசின் முக்கிய திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், காக்கும் கரங்கள், அன்புச் சோலை ஆகியவை குறித்து வெல்வோம் ஒன்றாக எனும் தலைப்பில் பாடல் வீடியோ என்று உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று
(ஜனவரி 08) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக..!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்து வெல்வோம்_ஒன்றாக..!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b