Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 08 ஜனவரி (ஹி.ச)
அமைச்சர் கே.என்.நேரு ஊழல் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதத்தை அடிப்படையாக வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு கடிதங்களை அனுப்பியது
பொதுவாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுபோன்ற புகார்களில் முதற்கட்ட விசாரணை மற்றும் விரிவான விசாரணையை நடத்தும் அது தொடர்பான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அமலாக்கத்துறை கடிதத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் மற்றும் அரசு வேலை ஆகியவற்றுக்கு லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
ஒப்பந்தங்கள் தொடர்பாக முறைகேடு நடைபெற்று 1020 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை ஆதார ஆவணங்களுடன் கடிதம் அனுப்பி இருந்தது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை பரிந்துரை செய்தது.
Hindusthan Samachar / P YUVARAJ