ஐ-பேக் அலுவலகத்தில் வருமான வரி சோதனை - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம்
கொல்கத்தா, 08 ஜனவரி (ஹி.ச.) மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ-பேக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீக் ஜெயினுக்க
ஐ-பேக் அலுவலகத்தில் வருமான வரி சோதனை - மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி கண்டனம்


கொல்கத்தா, 08 ஜனவரி (ஹி.ச.)

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐ-பேக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீக் ஜெயினுக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

போலி வேலை மோசடி புகாரில் ஐ-பேக் அலுவலகம் உள்ளிட்ட மம்தா தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஐ-பேக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீக் ஜெயினுக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெறுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் அரசியல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது,

திரிணாமுல் காங். கட்சி ஆவணங்களையும், வேட்பாளர் பட்டியலையும் எடுத்துச் செல்வதுதான் அமித்ஷா வேலையா? நாட்டின் பாதுகாக்க முடியாத அடாவடி அமைச்சர் அமித்ஷா, எங்கள் கட்சியின் ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்.பாஜக அலுவலகத்தில் நாங்கள் ரெய்டு நடத்தினால் என்ன ஆகும்?

தேர்தல் வருவதால் திரிணாமூல் காங். ஆவணங்களை அபகரிக்கின்றனர்.

தேர்தலுக்காக எங்கள் கட்சி தொடர்பான ஆவணங்களை ரெய்டு என்ற போர்வையில் எடுத்து செல்கிறார்கள். தேர்தல் வருவதால் ஒருபக்கம் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். இது அரசியல்ரீதியான சோதனை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் அமலாக்கத்துறையால் சோதனையால் மேற்குவங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் பாஜக பிரதான எதிர்க்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b