Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. சென்சார் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு என்பதால், படத்தை வெளியிட முடியாத சிக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் படம் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், ஆர்எஸ்எஸ் பிரச்சார திரைப்படங்களுக்கு மக்களிடையே எந்தப் பிடிப்பும் இல்லை; நம்பகத்தன்மையும் இல்லை; பொதுமக்கள் ஆர்வமும் இல்லை. இதனால் மோடி–ஷா ஆட்சி தன்னம்பிக்கையுடன் பதிலளிப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டைத் தேர்ந்தெடுக்கிறது. இப்போது திரைப்படத் துறை நேரடி இலக்காக மாற்றப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) கருத்துச் சுதந்திரத்தையும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது.
ஆனால் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், இந்த உரிமை சட்டத்தின் மூலம் அல்ல; அச்சத்தின் மூலம் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
ED, CBI, வருமான வரித்துறை — எதிர்ப்புக் குரலை அடக்குவதற்கான முன்நிலை ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இப்போது தணிக்கை வாரியமும் சினிமாவையும் சிந்தனைகளையும் கட்டுப்படுத்தப் பயன்படும் கருவியாக மாற்றப்படுகிறது.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் அச்சுறுத்தலுக்கான கருவிகளாகத் தாழ்த்தப்பட்டுள்ளன; அதே நேரத்தில் பாஜக–ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் “கலாச்சாரம்” என்ற பெயரில் முன்னிறுத்தப்படுகிறது.
சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்புச் பாதுகாப்பு தேவை.
அதிகாரத்தின் முன் கலை மண்டியிட வேண்டிய நிலை உருவானால், ஜனநாயகம் நீடிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN