ஜனநாயகனுக்கு பாஜக நெருக்கடி தரவில்லை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை, 08 ஜனவரி (ஹி.ச.) மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பொதுமக
செல்லூர் ராஜூ


மதுரை, 08 ஜனவரி (ஹி.ச.)

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார

நிலையத்தின் இரண்டாம் தளத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மதுரை மாநகர் கூடல் நகர் மாநகராட்சி வார்டு 2 ல் மதுரை மேற்கு தொகுதி

மேம்பாட்டு நிதியிலிருந்து, கூடுதல் பாலம் 25 லட்சம் ரூபாய் செலவில்

கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

மேலும், ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆமை வேகத்தில் முல்லைப்

பெரியாறு குடிநீர் திட்டப் பணி நடைபெற்று திறந்து வைக்கப்பட்டதால், ஆங்காங்கே

இணைப்புகள் சரியாக கொடுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் ஆங்காங்கே குடிநீர்க் குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடித்து சிதறுவதாகவும் சாடினார்.

மேலும் அவர் கூறுகையில், முதலமைச்சர் பயத்தில் ஏதேதோ பேசுகிறார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், பிஜேபி தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்தும் என பிதற்றுகிறார் என சாடினார்.

தொடர்ந்து ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக பதில் அளித்தவர், விஜய் கட்சி நடத்துவதற்கு எத்தனையோ விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம்.

அதை

விட்டு விட்டு ஜனநாயகன் படம் வெளியிடுவதற்கு நெருக்கடி கொடுப்பதாக சொல்வது எல்லாம் தவறு என்றார். மேலும், ஜனநாயகன் விவகாரத்தில் அரசியல் சாயம் பூசப்படுவதாக குற்றம்சாட்டினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam