Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 08 ஜனவரி (ஹி.ச.)
கரூர் சம்பவத்தில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு
முன்பே நடிகர் விஜய் நான் சென்னையில்தான் இருக்கிறேன், முடிந்தால் என்னைக்
கைது செய்யுங்கள் என வீரவசனம் பேசினார்.
தற்போது சிபிஐ 12-ம் தேதி ஆஜராக
நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வசனத்தை இப்போது பயன்படுத்துவாரா அல்லது
பாஜகவுடன் இணைந்து நாடகம் ஆடுவாரா என்று சபாநாயகர் அப்பாவு நெல்லையில் வினவியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு,
நடிகர் விஜய்க்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்தும், திரைப்பட
வெளியீட்டு சிக்கல்கள் குறித்தும் பதிலளித்தார்.
41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் நான் சென்னையில்தான் இருக்கிறேன்,
முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என வீரவசனம் பேசியதாக குறிப்பிட்ட அவர், தற்போது சிபிஐ
12-ம் தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வசனத்தை இப்போது
பயன்படுத்துவாரா அல்லது பாஜகவுடன் இணைந்து நாடகம் ஆடுவாரா என்று
தெரியவில்லை என்றார்.
உச்சநீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணையைக் கேட்டாலே நியாயம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு.
ஆந்திராவில் ஒரு ரசிகர் இறந்ததற்கு ஒரு
நடிகரே கைது செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து
நடத்தி இருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசுதான் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் (Censor Certificate)
வழங்குகிறது. அப்படியிருக்க, படம் வெளியாவதில் சிக்கல் இருப்பது போலவும்,
அதைத் தொண்டர்கள் மத்தியில் ஒரு கொதிநிலையை உருவாக்குவதற்காகவும் பாஜகவும் விஜய்யும் இணைந்து செயல்படுவதாகத் தெரிகிறது என அப்பாவு சந்தேகம் தெரிவித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், பிரதமருக்கும் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என
பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி பலமுறை கூறியும் அவர் மீது ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை.
அதுபோன்று காங்கிரஸ் கட்சியில் பலர் கூட்டணி குறித்து
பேசினாலும் தலைமை நல்ல முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam