அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கை திரும்ப அளித்தது உயர்நீதிமன்றம் பதிவுத்துறை
சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.) தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ய கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழக அமைச்சர் கே.என். நேரு சுமார் 1,0
Trichy KN Nehru


சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)

தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ய கோரி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

தமிழக அமைச்சர் கே.என். நேரு சுமார் 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி அமலாக்கதுறை காவல்துறை டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அமலாக்கத்துறை தெளிவாக கூறியுள்ளதா இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கடந்த மாதம்

13ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவில் பிழைகள் உள்ளதால் இதனை அப்படியே வழக்கு எண்ணிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்து பிழைகளை திருத்தம் செய்து தாக்கல் செய்ய பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ