Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்தில் சமத்துவ நடை பயணம் தொடங்கியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தற்பொழுது மேலூர் பகுதியில் தனது சுற்றுப்பணத்தை தொடர்ந்து வருகிறார்.
அப்பொழுது இன்று காலை மதுரை மாவட்டம் மேலூர் - கொட்டாம்பட்டி பகுதியில் தனது நடைப்பயணத்தை தொடங்கினார்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு தற்பொழுது கல்லூரிகளுக்குள் வந்து விட்டதாகவும், உயர்நிலை பள்ளிகளுக்குள்ளும் வந்துவிட்டதாகவும், மேலும் நமது வீட்டு குல கொடிகள் பெண்பிள்ளைகளும் போதை பொருள்களை பயன்படுத்த தொடங்கி விட்டதாகவும் இதற்கு வெட்கப்படுவதாகவும் வேதனைப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் போதைப் பொருளை வழக்கு இதுவே அதிகமாக வைத்திருப்போருக்கு பல ஆண்டுகள் சிறையும், போதை பொருளை பயன்படுத்துவதற்கு சில ஆண்டுகள் சிறையும் போதை பொருளை விநியோகிப்பவர்களுக்கு பல ஆண்டுகள் சிறையும் என தண்டனைகளை வழங்கி தமிழக அரசு தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
Hindusthan Samachar / ANANDHAN