Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 08 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரொக்கத்துடன் வழங்குவது வழக்கம். எனினும் கடந்த ஆண்டு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை.
இந்த ஆட்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு மற்றும் ரூ.3000 பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே, இந்த பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று ஆலந்தூரில் பொங்கல் பரிசு விநியோகத்தை முதலவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தமிழக அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை இன்று தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் சார்பில் 3000 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் பேசுகையில்,
தூத்துக்குடி மாநகர் பகுதியில் தற்போது 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் வரும் 2026 ஆம் ஆண்டு நீங்கள் எல்லோரும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன், திமுக நிர்வாகிகள் பிரபாகர், ஜேஸ்பார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Hindusthan Samachar / vidya.b