Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)
சென்னை மின்ட் அருகே உள்ள பழைய சிறைச்சாலை சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் 776 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
776 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அடுக்குமாடி குடியிருப்பு காம்பவுண்ட் வெளியே மின்ட் மேம்பாலம் உள்ளது பாலத்தில் செல்லாமல் பாலத்திற்கு கீழ் செல்லும் பேருந்து செல்வதற்கு இடையூறாக காம்பவுண்ட் ஒட்டிய நடைபாதை இருக்கிறது என அமைச்சர் சேகர் பாபு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மேலும் அவ்வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்களிடம் இன்னும் எவ்வளவு தூரம் நடைபாதையை குறைக்க வேண்டும் என கேட்டார். நடைபாதையை இரண்டடி உள்பக்கமாக கட்டுமாறும் அறிவுறுத்தினார்.
416 சதுர அடி கொண்ட 776 வீடுகள் வரும் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலேயே குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம், நூலகம், படிப்பகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் அப்பகுதிக்கான நியாய விலை கடை ஆகியவை கட்டப்பட்டு வருகிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ