பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திற்கான சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.) பொங்கலை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கிடையே ஏற்கனவே 10 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கல் ச
Train


சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)

பொங்கலை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கிடையே ஏற்கனவே 10 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொங்கல் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 15 ஆகவும் , சிறப்பு ரயில்களின் பயண எண்ணிக்கை 50 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைகள் குழு உறுப்பினர் ஜாபர் அலி

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 சிறப்பு ரயில்களும் தாம்பரம் - நெல்லை , போத்தனூர்

( கோவை ) - சென்னை , செங்கல்பட்டு - நெல்லை , சென்னை - தூத்துக்குடி , நெல்லை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இருமார்க்கமாக இயக்கப்பட உள்ளன.

தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஜன.12 மற்றும் 19 ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும் , நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ஜன. 13 மற்றும் 20 ம் தேதிகளிலும் புறப்படுகிறது.

கோவில்பட்டி , சாத்தூர் விருதுநகர் , கொடை ரோடு , திண்டுக்கல் , திருச்சி , விழுப்புரம் மேல்மருவத்தூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

போத்தனூர் - சென்னை சிறப்பு ரயில் போத்தனூரில் இருந்து இன்று ஜன 8 ம் தேதியும் , சென்னையில் இருந்து போத்தனூருக்கு ஜன 9 ம் தேதியும் திருப்பூர் , ஈரோடு , சேலம் , ஜோலார்பேட்டை , காட்பாடி , அரக்கோணம், திருவள்ளூர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.

நெல்லை - செங்கல்பட்டு சிறப்பு ரயில் மதுரை , திண்டுக்கல் திருச்சி , அரியலூர் , செங்கல்பட்டு வழித்தடத்தில் இருமார்க்கமாக ஜன . 14 ம் தேதியும்

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஜன 12 மற்றும் 19ம் தேதியும் , தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஜன.13 மற்றும் 20 ம் தேதியும் மேற்கு மாவட்டங்கள் வழியே அரக்கோணம் , காட்பாடி, , ஜோலார்பேட்டை , நாமக்கல் , கரூர் ,திண்டுக்கல் , மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.

கோவை - மதுரை இடையே சிறப்பு ரயில்களின் 4 சேவையும் வழங்கப்பட உள்ளன.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணியர் கூட்டம் அதிகமிருப்பின் சிறப்பு ரயில்களுடன் சேர்த்து மெமு ரயில்களையும் முக்கிய நகரங்கள் இடையே இயக்க தெற்கு ரயில்வே சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ