முதல்வரின் திட்டங்களால் எதிர்க்கட்சிகள் திக்குமுக்காடி நிற்பதாக அமைச்சர் சேகர்பாபு பேச்சு
சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.) சென்னை மண்ணடி மிராலி தெரு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன், 3 ஆயிரம் ரூபாய் ப
சேகர்பாபு


சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)

சென்னை மண்ணடி மிராலி தெரு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன், 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்,

இல்லமெல்லாம் எழுச்சி உள்ளமெல்லாம் மகிழ்ச்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு. அடுக்கடுக்கான திட்டங்கள், இந்த மாதம் முதலவரால் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் இல்லங்களிலும் மடை திறந்த வெள்ளமாக பாய்ந்துகொண்டு இருப்பதால், எதிர்க்கட்சிகள் திக்கி திணறி, திக்குமுக்காடி என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றுகொண்டு இருக்கிறார்கள் என கூறினார்.

மேலும், லேப்டாப் வழங்கும் திட்டம், பென்சன் திட்டம், செவிலியர்களை தூண்டிவிட்டு போராட வைக்க முயன்றவர்கள் நோக்கத்தில் மண், 3 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை, கரும்பு, சர்க்கரை, அரிசி, புத்தாடை என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்களை முழ்கடித்துக்கொண்டு இருக்கிறார் முதல்வர் என புகழாரம் சூட்டினார் .

மேலும், எதிரிகளையும் திணறடித்துக்கொண்டு இருக்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என் பெருமிதம் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam