ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.) இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2
ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு


புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.)

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

பின்னர் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) 2 கட்டங்களாக நடக்கிறது.

இதில் முதல்கட்ட கணக்கெடுப்பு இந்த ஆண்டே தொடங்குகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை வீடுகளை பட்டியலிடுதல், வீடுகளை கணக்கெடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கான முறையான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘2027-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும் என்று மத்திய அரசு இதன் மூலம் அறிவிக்கிறது.’

என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM