புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநர்கள் ஸ்டிரைக் வாபஸ்
புதுச்சேரி, 08 ஜனவரி (ஹி.ச.) புதுச்சேரி அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பேருந்துகள் அக்டோபர் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார பேருந்துகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற
புதுவை மின் பேருந்து


புதுச்சேரி, 08 ஜனவரி (ஹி.ச.)

புதுச்சேரி அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23

கோடியில் 25 மின்சார பேருந்துகள் அக்டோபர் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த மின்சார பேருந்துகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், துவங்கிய 10 நாட்களிலேயே ஊதியம் தொடர்பான முரண்பாட்டால் மின்சார பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிலிருந்து மூன்று முறை இந்த போராட்டமானது நடைபெற்றது.

இந்நிலையில், இன்று திடீரென்று ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். சம்பளம் ரூ.21 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தாலும் பிடித்தம் போக ரூ.17 ஆயிரம் மட்டும்தான் கிடைப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதோடு தினப்படியும் வழங்குவதில்லை என்று குமுறும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டிரைக்கில்

ஈடுபட்டனர். நிர்வாகம் தரப்பில் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எனினும், பேச்சுவார்த்தை பலன்தரவில்லை.

தொடர்ந்து நிர்வாகம் ஊழியர்களிடம்

பேச்சுவார்த்தை நடத்தி, வரும் பொங்கல் பண்டிகை ஒட்டி இது போன்ற வேலை

நிறுத்தத்தில் ஈடுபடுவது நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தங்களுடைய

கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தது.

தொடர்ந்து

போராட்டம் கைவிடப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த வேலை

நிறுத்த போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam