மீண்டும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் வழக்கு விசாரணை-நீதிமன்றம் ஒத்திவைப்பு!
புதுடெல்லி, 08 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்
உயர்நீதிமன்ற மதுரை கிளை


புதுடெல்லி, 08 ஜனவரி (ஹி.ச.)

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், தமிழகத்தில் 01.04.2003-க்கு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதுநாள் வரை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

மத்திய அரசு 2013ல் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. தமிழகம் இதனை பின்பற்றவில்லை.

ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுனர் குழு அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை.

இனால் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர்.

எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கடந்த 2014 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கலைமதி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி தமிழக அரசு தற்போது பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TamilNadu Assured Pension Scheme – TAPS) திட்டம் அறிவித்துள்ளது அதற்கான அறிவிப்பாணை இரண்டு வாரங்களில் வெளியிட உள்ளோம் என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam