ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் -  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அரிசி குடும்ப அட்டைத
Udhay


சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது.

விலையில்லா, வேட்டி சேலையும், பொங்கல் பரிசுத் தொகையாக 3000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஐந்து நாட்களில் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழக முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

தமிழக முழுவதும் இரண்டு 2.27 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் மற்றும் பரிசுத்தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலந்தூரில் இன்று பொங்கல் பரிசு பணம் மற்றும் தொகுப்பு கொடுக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.

ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுகிறது என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ