Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 8 ஜனவரி (ஹி.ச.)
கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் பட்ஜெட் தாக்கல் போன்ற மிக முக்கிய நிகழ்வுகளுக்காக பார்லிமென்ட் கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த 1999-2000 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஆலோசனை நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பிப்ரவரி 1 அன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது என ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி உரையுடன் துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனவரி 29-ல் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM