Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 08 ஜனவரி (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய மண் அணை ஆகும்.
இது நீர்ப்பாசனம், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் விநியோகத்திற்காகப் பயன்படுகிறது
பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக, பாசன நிலங்களுக்கு நாளை (09.01.2026 )காலை 8.00 மணி முதல் 30.04.2026 காலை 8.00 மணி வரை 67 நாட்கள் தண்ணீர் திறப்பு மற்றும் 44 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற முறையில், 12000.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b