Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 08 ஜனவரி (ஹி.ச.)
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் தைப்பொங்கல் முதல் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் பில்லமநாயக்கன்பட்டி, நெய்க்காரப்பட்டி,புகையிலைப்பட்டி, கொசவபட்டி, மாரம்பாடி, நத்தம் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்துார் ஹைகோர்ட் பத்ர காளியம்மன் கோயில் திடலில் ஜனவரி 17 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து தகுதி உள்ள காளைகள் வருகின்றன.
நெய்க்காரப்பட்டி, பெரியகலையம்புத்துார் பகுதியில் தமிழக முழுவதும் நடைபெறும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க பலர் காளைகளில் வளர்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல், மண்ணைக் குத்துதல், பாய்தல், துள்ளி குதித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளுக்கு பேரிச்சம்பழம், பருத்தி விதை, தவிடு, தீவனங்கள் தேவையான அளவு வழங்கி திடகாத்திரமாக வளர்த்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b