பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை
சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று
பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை


சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் இன்று

(8.1.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமுடிவாக்கம்: வழுதலம்பேடு, விஜயராஜாநகர், நத்தம், வர்ஷ்நகர், சந்தோஷ் அவென்யு, அருணாச்சலேஸ்வரர்நகர், சம்பந்தம்நகர், லட்சுமிநகர், ஐஸ்வர்யம்நகர், பத்மாவதிநகர், எம்.எம்.அவென்யு.

அம்பத்தூர்: கேலக்ஸி சாலை, ஜீசன் காலனி, வானகரம் சாலை, பொன்னியம்மன்நகர், ராஜன்குப்பம், மெட்ரோசிட்டி, வி.ஜி.என். மகாலட்சுமிநகர், எஸ் மற்றும் பி, பாடசாலை தெரு, சென்னை நியூ சிட்டி, விஜயாநகர், சரஸ்வதிநகர், ஈடார்ன் அவென்யூ, பொன்ராஜ் குப்பம், பெருமாள் கோயில் தெரு, செட்டி பிரதான சாலை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b