புலிகள் கணக்கெடுப்பு பணிக்கு 186 களப்பணியாளர்கள் நியமனம்
கோவை, 08 ஜனவரி (ஹி.ச.) இந்திய வன உயிரின அமைப்பு மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு தழுவிய அளவில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி, ஆனைமலை புலிகள்
புலிகள்  கணக்கெடுப்பு பணிக்கு 186 களப்பணியாளர்கள் நியமனம்


கோவை, 08 ஜனவரி (ஹி.ச.)

இந்திய வன உயிரின அமைப்பு மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு தழுவிய அளவில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

வரும், ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கணக்கெடுக்கும் பணியில், 32 சுற்றுகளாக, 62 நேர்கோட்டு பாதையில் , 186 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட நவமலை பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணிகளில், முதல் மூன்று நாட்கள் மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கால் தடங்கல், நகக்கீறல்கள், விலங்குகளின் எச்சங்கள் கணக்கொடுக்கப்பட்டன.

அடுத்த மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதையில், காட்டு யானை, மான், பறவை, தாவர இனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும், அறிக்கை தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வால்பாறை மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இருவனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகின்றது. வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையிலும், மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலும் வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

புலிகள் கணக்கெடுப்பு பணியில் முதல் நாளில் நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு, புலியின் கால்தடம், எச்சம் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

புலிகள் கணக்கெடுப்பின் போது, சிறுத்தை, காட்டுமாடு, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b