Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
சென்னை ஒய்.எம்,சி,ஏ மைதானத்தில் 49வது புத்தகக் கண்காட்சி இன்று முதல் வருகிற ஜனவரி 21 ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் புத்தக கண்காட்சி வருவதற்கு இலவச மினி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், சிசிவிடி காட்சிகள் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார் அதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயரில் பொற்கிழி விருதுகளை ஆறு எழுத்தாளர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
சென்னையில் தொடர்ந்து 49வது ஆண்டாக நடைபெறு வரும் புத்தகக்காட்சி அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அறிவுவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் புத்தகக் காட்சியை செயல்படுத்தி வருவது பாராட்டுகிறேன்.
முதன் முதலில் தொடங்கும் போது 13 அரங்குகள் உடன் தொடங்கிய புத்தக்காட்சியை இன்று 1000 அரங்குகளில் கொண்டு வந்ததுள்ளனர்.
அதிகமாக மக்கள் புத்தக்காட்சிக்கு வர வேண்டும். அந்த வகையில் நுழைவு கட்டணம் ரத்து செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
புதியதாக பபாசி அமைப்புக்கு பொறுப்பு ஏற்றுள்ள அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த அமைப்பு சார்பில் கருணாநிதி அவர்கள் பெயரில் 6 பேருக்கு விருது வழங்கப்பட்டது முக்கியமானது.
விருது பெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் சமூகம் அறிவியல் சிறந்த சமூகமாக மதிப்பப்பட வேண்டும். அதற்காக அறிவு புரட்சி ஏற்பட வேண்டும். அதற்காக தோன்றயது தான் திராவிட இயக்கங்கள்.
பெரியார் அண்ணா சொன்ன வழியில் திராவிட மாடல் அரசு பயணித்து வருகிறது. அந்த வகையில் தான் என்னை சந்திக்க வருவோர் பொன்னாடை வழங்க வேண்டாம் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று கூறினேன்.
அந்த வகையில் இதுவரையில் 4 லட்சம் புத்தகங்கள் எனக்கு வழங்கினர். அதனை நூலகங்களுக்கு வழங்கினேன்.
வள்ளுவர் கோட்டத்தில் அறிவு திருவிழா நடத்தினார்கள். அதனை நான் பார்த்தேன் என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ