Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
ஜனநாயகம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது குறித்து அந்த படத்தின் நாயகன் விஜயே வாய் திறக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.
காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.
கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், ஏ திமுக அரசே! என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், ஏ பாஜக அரசே! என்று பொங்க மாட்டார்.
எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள், பொங்கலோ பொங்கல் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ