சென்னை அசோக் நகரில் மின் கசிவால் 4 வாகனங்கள் தீயில் சேதம் – ரூ.7 லட்சம் இழப்பு
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) சென்னை அசோக் நகர் 88-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48). ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் இவரது மனைவி மெஸ்ஸி, நேற்று விஜயகுமார் குடும்பத்துடன் தாம்பரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு நான்கு சக்கர ஆம்னி காரில் சென்று
Fire


Fore


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

சென்னை அசோக் நகர் 88-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48). ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் இவரது மனைவி மெஸ்ஸி, நேற்று விஜயகுமார் குடும்பத்துடன் தாம்பரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு நான்கு சக்கர ஆம்னி காரில் சென்று, இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நள்ளிரவு 2.30 மணியளவில் விஜயகுமாருக்கு சொந்தமான மூன்று ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்னி கார் என மொத்தம் நான்கு வாகனங்கள் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தன.

அருகில் வசிக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, விஜயகுமார் குடும்பத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மின் கசிவு காரணமாக முதலில் ஒரு ஆட்டோ தீப்பற்றி எரிந்து, பின்னர் மற்ற வாகனங்களுக்கு தீ பரவியதாக தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக உரிமையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ