Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 09 ஜனவரி (ஹி.ச.)
கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முரளி வேல். கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வரத லட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 1.5 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த வரதட்சணைக்கு அண்மையில் பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வரத லட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 20- ஆம் தேதி ( சனிக்கிழமை) அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், தாயும், சேயும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இந்த நிலையில், பச்சிளம் பெண் குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் சில உடல் நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், திடீரென குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனே, முரளி வேல் மற்றும் அவரது மனைவி வரதலட்சுமி குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர், குழந்தை வெகு நேரம் அழுது கொண்டிருந்ததால், தாய் வரதலட்சுமி குழந்தைக்கு பால் புகட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது, பால் குடித்துக் கொண்டிருந்த அந்த குழந்தை திடீரென அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனை பார்த்த தாய் வரதலட்சுமி அதிர்ச்சி அடைந்து மருத்துவரிடம் கூறினார். அவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன் பேரில், வரதலட்சுமியும் மற்றும் அவரது கணவர் முரளி வேல் ஆகியோர் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்த போது, பச்சிளம் பெண் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்தாக தெரிவித்தனர்.
குழந்தைக்கு அவரது தாய் வரதலட்சுமி பால் புகட்டிய போது, ஏற்பட்ட இருமலால் புரை ஏறி மூச்சு திணறல் ஏற்பட்டு பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை கேட்ட குழந்தையின் பெற்றோர் முரளி வேல் மற்றும் வரதலட்சுமி கதறி அழுதனர்.
பின்னர், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கான கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, முரளிவேல் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயிடம் பால் அருந்திய பச்சிளம் பெண் குழந்தை புரை ஏறியதால் முச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN