சுப்ரீம் கோர்ட்டில் பொதுச் செயலாளர் பதவி குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை
புதுடெல்லி, 9 ஜனவரி (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, சென்னை சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2022 ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்
சுப்ரீம் கோர்ட்டில் பொதுச் செயலாளர் பதவி குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு மீது  இன்று விசாரணை


புதுடெல்லி, 9 ஜனவரி (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, சென்னை சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2022 ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரியும் முறையிட்டு இருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சிவில் கோர்ட்டு கடந்த ஜூலையில் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சூரியமூர்த்தி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கையும் நிராகரித்து கடந்த செப்டம்பர் 4-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சூரிய மூர்த்தி சார்பில் வக்கீல் அனில் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM