சென்னை காந்தி மண்டபம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தால் பரபரப்பு
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த வெங்கடபதி என்பவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு நேற்று மாலை தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருடன் காரில் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்
Fore


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த வெங்கடபதி என்பவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு நேற்று மாலை தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருடன் காரில் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலை வழியாக காந்தி மண்டபம் மேம்பாலத்தில் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென காரில் முன்பகுதியில் இருந்து கரும்புகை வருவதை கண்ட வெங்கடபதி உடனே காரை நிறுத்தி விட்டு அனைவரும் காரில் இருந்து இறங்கி ஓடினர். அவர்கள் இயங்கிய சில நிமிடங்களில் கார் மலமலவென தீப்பிடித்து எரிந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனே பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் பேரில் கிண்டி சைதாப்பேட்டை பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே கோட்டூர்புரம் போலீஸார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இந்த தீவிபத்து யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இந்த தீ விபத்தில் கார் மட்டும் முற்றிலும் எரிந்து சேதமானது.இந்த விபத்து குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ