Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 09 ஜனவரி (ஹி.ச.)
பெங்களூரில் இருந்து கார் ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள வேகத்தடையை கடக்க முயன்ற பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதனை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்பதற்காக விரைந்து சென்ற பொழுது காலில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியே வந்து தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக எலவனாசர் கோட்டை காவல் நிலையத்திற்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற எலவனாசூர்கோட்டை காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் போலீசார் அந்த காரின் கண்ணாடிகளை உடைத்து பார்த்த பொழுது, காருக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 32 மூட்டை புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் என கூறப்படுகிறது.
இதையடுத்து கார் மற்றும் பான் மசாலா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த காரில் இருந்த நம்பர் பிளேட் போலியானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து எலவனாசூரகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பான் மசாலா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN