கணவர் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருப்பதாகக்  குற்றம்சாட்டி, திருமணமான பெண் கத்தியால் கணவரை விரட்டிய சம்பவம்
தெலங்கானா, 09 ஜனவரி (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரைச் சேர்ந்த மெருகு ஸ்ரீகாந்த் - ஜ்யோத்ஸ்னா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில், தனது கணவர் ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணுடன் தவறான உறவு வைத்திருப்பதாகச் சந்தேகித்து
கணவன் மனைவி பிரச்னை


தெலங்கானா, 09 ஜனவரி (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம்

வாரங்கல் நகரைச் சேர்ந்த மெருகு ஸ்ரீகாந்த் - ஜ்யோத்ஸ்னா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில், தனது கணவர் ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணுடன் தவறான உறவு வைத்திருப்பதாகச் சந்தேகித்து ஜ்யோத்ஸ்னா கடும் கோபமடைந்தார்.

இதனால் கணவரை

கத்தியால் தாக்க முயன்றார். சூழல் கைமீறுவதை உணர்ந்த ஸ்ரீகாந்த் தப்பி ஓடி,

அருகிலிருந்த ஒரு நகைக்கடையில் ஒளிந்துகொண்டு டயல் 100க்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து ஜ்யோத்ஸ்னாவின்

கையிலிருந்த கத்தியைப் பறித்து சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பின்னர் ஜ்யோத்ஸ்னா சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். தனது கணவர்

ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணுடன் தவறான உறவு வைத்துக்கொண்டு, தனக்கு விவாகரத்து

கொடுக்க முயல்கிறார் என்றும், தனது சொத்தை கையகப்படுத்த முயல்கிறார் என்றும்

பகிரங்கமாகக் குற்றம்சாட்டி, கத்தியைக் கொடுங்கள், அவனைக் கொன்றுவிட்டு நான்

சாவேன் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஸ்ரீகாந்த் ஏற்கெனவே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் (வழக்கு

நிலுவையில் உள்ளது), மனைவியின் மனநிலை சரியில்லை என்று குற்றம்சாட்டியதாகவும்

தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தம்பதியினர் இடையே கடுமையான மோதல்கள் நீடிப்பதாகத் தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜ்யோத்ஸ்னாவை சமாதானப்படுத்தி, சட்டரீதியாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam