கரூர் துயர சம்பவம் - உள்துறை அமைச்சக அதிகாரிகள், தடவியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
கரூர், 09 ஜனவரி (ஹி.ச.) கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உ
Karur Stampede CBI Case


கரூர், 09 ஜனவரி (ஹி.ச.)

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் தான்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் முகாமிட்டுள்ள அதிகாரிகள் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நான்கு காவலர்கள் ஆஜராகி உள்ளனர். குறிப்பாக வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் 3டி லேசர் கருவி மூலம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று டெல்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் சாலையை டேப் மூலம் அளந்து ஒயிட் பவுடர் மூலம் கோடிட்டு அதனை குறித்து வருகின்றனர்.

மேலும் அளவிடும் பணியினை வீடியோ போட்டோ மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN