கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தடை விதிப்பதாகக் குற்றம் சாட்டி ஜனவரி 12-ல் 'சத்யாகிரகப் போராட்டம்' - பினராயி விஜயன் அறிவிப்பு
திருவனந்தபுரம், 9 ஜனவரி (ஹி.ச.) கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு ‘நிதித் தடைகளை‘ விதிப்பதாகக் குற்றம் சாட்டி,
கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தடை விதிப்பதாகக் குற்றம் சாட்டி ஜனவரி 12-ல் 'சத்யாகிரகப் போராட்டம்' - பினராயி விஜயன் அறிவிப்பு


திருவனந்தபுரம், 9 ஜனவரி (ஹி.ச.)

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த நிலையில், கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு ‘நிதித் தடைகளை‘ விதிப்பதாகக் குற்றம் சாட்டி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரும் ஜனவரி 12-ஆம் தேதி அன்று மாபெரும் சத்யாகிரகப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த அறப்போராட்டத்தில் கேரள மாநில அமைச்சர்கள், இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். முன்னதாக 2019 டிசம்பர் 16-ந் தேதி மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பினராயி விஜயன் பங்கேற்றார்.

2024-ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசின் கூட்டாட்சி மீதான தாக்குதலையும் கேரளாவிற்கான நிதிப் புறக்கணிப்பையும் கண்டித்து டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பினராயி விஜயன் தலைமை தாங்கினார்.

அப்போராட்டத்தில் கேரள மந்திரிகள் பங்கேற்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM