Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜனவரி (ஹி.ச)
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி நிதி முறைகேடு செய்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. இயக்குநர் கார்த்திகேயன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அறக்கட்டளை தற்காலிக சி.இ.ஓ.வடிவேல், கால்நடை நல கல்வி மைய உதவியாளர் ரஜினி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அறக்கட்டளை தற்காலிக சி.இ.ஓ.வடிவேல் முறைகேட்டில் ஈடுபட்ட ஆவணங்களை மறைத்து, தலைமறைவாகிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
பல்கலை.க்கு சொந்தமான 12 வங்கி கணக்குகளில் இருந்து வடிவேல் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கில் சுமார் 3 கோடி முறைகேடாக அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகளுக்காக பல்கலைக்கழகத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், நிதி முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்துள்ளன, குறிப்பாக கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதத்தில் இது குறித்த செய்திகள் பரவலாகப் பரவின, நிதி முறைகேடு புகார்கள் காரணமாக சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
கால்நடை மருத்துவ காப்பீட்டு அறக்கட்டளையில் 2021ம் ஆண்டு முதல் நிதி முறைகேடு நடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக இயக்குநரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி நிதி முறைகேடு நடந்திருப்பதும் விசாரணையில் அம்பலமானது.
Hindusthan Samachar / P YUVARAJ