நாகப்பட்டினம் -இலங்கை கப்பல் சேவை ஜனவரி 18ம்தேதி முதல் மீண்டும் துவக்கம்
நாகப்பட்டினம், 09 ஜனவரி (ஹி.ச.) வடகிழக்கு பருவமழையின் போது உருவான டித்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து
நாகப்பட்டினம் -இலங்கை கப்பல் சேவை ஜனவரி 18ம்தேதி முதல் மீண்டும் துவக்கம்


நாகப்பட்டினம், 09 ஜனவரி (ஹி.ச.)

வடகிழக்கு பருவமழையின் போது உருவான டித்வா புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த புயல் தாக்கத்தால் இலங்கை காங்கேசன் துறைமுகம் கடுமையாக சேதமடைந்தது.

இதையடுத்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவை கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

மேலும் புயலின் காரணமாக சேதமடைந்த இலங்கை காங்கேசன் துறைமுக சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவு பெற்றள்ளது.

இதையடுத்து நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறையிலான கப்பல் சேவை மூன்றரை மாதங்களுக்கு பின் வரும் ஜனவரி 18ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்த முறை நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான கப்பல் சேவையின் போது பயணிகள் அதிகம் செல்லும் வகையில் புதிய கப்பல் இயக்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b