சென்னை என்.எஸ்.சி போஸ் சாலை நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்நீதிமன்றம்
சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.) சென்னை என்.எஸ்.சி போஸ் சாலை நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதி
Nsc


Nsc


சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)

சென்னை என்.எஸ்.சி போஸ் சாலை நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாய்லை ஆக்கிரமங்களை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அகற்றப்படும் கடைகள் மீண்டும் உருவாகாமல் தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது

என்.எஸ்.சி போஸ் சாலை, வியாபாரம் செய்யக் கூடாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்தது.

நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க இரு வழக்கறிஞர்களை சிறப்பு ஆணையராக நியமித்து உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் உருவானதாக வழக்கறிஞர்கள் ஆணையர் அறிக்கை அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ. டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ