புயல் சின்னம் காரணமாக பாம்பன் அருகே கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
ராமநாதபுரம், 09 ஜனவரி (ஹி.ச.) வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து அது புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புயல் இலங்கை திரிகோணமலை கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என தெர
கடல் உள்வாங்குதல்


ராமநாதபுரம், 09 ஜனவரி (ஹி.ச.)

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து அது புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புயல் இலங்கை திரிகோணமலை கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்ன பாலம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாம்பன் சின்னபாலம் பகுதியில் கடல் காலையிலிருந்து சுமார் கரையோர பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

இதனால் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தரைதட்டி நிற்கிறது. மேலும் கடல் உள்வாங்கி இருப்பதால் சங்குகள், பாசிகள், சிப்பிகள் அனைத்தும் வெளியே தெரிகிறது.

மேலும் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய நாட்டுப் படகுகளும் படகுகளை கரைக்குக் கொண்டு வர முடியாமல் பிடித்து வந்த மீன்களை கையில் சுமந்தபடி கரைக்கு கொண்டு சேர்த்து வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்குவதும் கடல் சீற்றத்துடன் காணப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மீனவர்களின் அச்சத்தை போக்க அரசு இது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே மீனவர்களின் கருத்தாக உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN